டைட்டானிக் என்னும் மாபெரும் படிப்பை கொடுத்து உலக ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இதையடுத்து நீண்ட கால உருவாக்கமாக இவர் இயக்கிய படம் தான் அவதார்.
28
avatar
முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவான இந்த படமும் உலக சினிமாவில் சாதனை படித்தது. பிரம்மிப்பில் ஆழ்த்திய இந்த படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளிகி பாக்ஸ் ஆபிஸில் 2500 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
38
avatar
இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியானது. 13 வருட கடின உழைப்புக்கு பின்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ளது படம் அவதார் 2.
48
Avatar2
அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டு இப்படத்துக்கு உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 16-ந் தேதி உலகமெங்கும் 160 மொழிகளில் அவதார் 2 வெளியாக உள்ளது.
58
Avatar2
இந்த இரண்டாம் பாகத்தில் ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி, சிசிஹெச் பவுண்டர், எடி பால்கோ, கேட் வின்ஸ்லெட் அன மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
68
Avatar2
டிஸ்னிக்கு சொந்தமான 20th செஞ்சுரி ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அறிவியல் புனை கதையாக உருவாகியுள்ளது. இதிலிருந்து கடந்த மே 6- ம் தேதி ட்ரைலர் வெளியானது.
78
avatar 2
தமிழ் , தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் கன்னடம் மற்றும் மலையாள டப்பிங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த பக்கங்களுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
88
avatar 2
அவதாரில் 5 பாகங்கள் வரை இருக்கிறதாம். இதன் மூன்றாம் பாகம்வருகிற டிசம்பர் 20, 2024 லும், அவதார் நான்காவது பாகம் டிசம்பர் 18, 2026 அன்றும், அவதாரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகத்தை டிசம்பர் 22, 2028 அன்றும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.