அந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், விஷால், கார்த்தி, துணைத் தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர்; நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுள்ளோம். இன்னும் 40 சதவீத கட்டிடப்பணிகள் முடிவடைய வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை. எனவே, வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளோம். அதேபோல, நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட உள்ளோம். இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டிட வேலையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். என கூறியுள்ளனர்