பின்னர் தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படங்களெல்லாம் தோல்வியை தழுவியதால் தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் அங்கு ராசியான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.