vijay son Jason sanjay : விஜய் மகனுக்கு நூல்விடும் பிரபல சீரியல் நடிகை.... அவரின் ‘அந்த’ ஆசை நிறைவேறுமா?

Published : May 09, 2022, 02:28 PM IST

vijay son Jason sanjay : விஜய் மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக பிரபல சீரியல் நடிகை தெரிவித்துள்ளார்.

PREV
14
vijay son Jason sanjay : விஜய் மகனுக்கு நூல்விடும் பிரபல சீரியல் நடிகை.... அவரின் ‘அந்த’ ஆசை நிறைவேறுமா?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் சங்கீதா என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா ஷாஷா என்கிற மகளும் உள்ளனர். விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை அண்மையில் படித்து முடித்தார்.

24

இதையடுத்து விஜய் மகன் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. முதலில் அவர் இயக்குனராக ஆசைப்படுவதாகவும், படம் இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவரை தன்னைப்போல் மிகப்பெரிய நடிகனாக்க நடிகர் விஜய் ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

34

இதற்கெல்லாம் சமீபத்திய நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்த விஜய், சஞ்சய் தற்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என கூறினார். மேலும் சஞ்சய்க்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சூப்பர் கதை ஒன்றை சொன்னதாகவும், ஆனால் சஞ்சய் தற்போது நடிக்க ஆர்வம் இல்லை என்பதால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் விஜய் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

44

இந்நிலையில், மெளன ராகம் 2 சீரியல் நடிகையான ரவீனா, சமீபத்திய பேட்டியில், விஜய் மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக கூறி உள்ளார். இப்போதே விஜய் மகனுக்கு நூல்விட்டு வரும் நடிகை ரவீனாவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  திருடி மாட்டிக்கொண்ட காஜல் அகர்வால்... ‘இதெல்லாம் தேவையா’ என விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories