தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் தற்போது பின்னணி பாடகி கெனிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கின்றன. மனைவி ஆர்த்தி உடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் அவர் கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இத்தனை நாட்களாக சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்த ரவி மோகன், தற்போது சர்ச்சை நாயகனாக மாறியிருக்கிறார். மனைவி ஆர்த்தியுடன் பிரிவு, நடிகை கெனிஷா உடனான நட்பு, பெயர் மாற்றம் ஆகியவை ரவி மோகனை சர்ச்சை நாயனாக மாற்றியுள்ளது.
25
ரவி மோகனின் திரைப்பயணம்
தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரவி மோகன். தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கைவசம் ‘கராத்தே பாபு’, ‘தனி ஒருவன் பாகம் 2’, ‘ஜீனி’, ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆரவ் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
35
ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு
ரவி மோகனின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென மனைவியுடன் விவாகரத்து என்கிற பேச்சு எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியிருந்தனர். இந்த களேபரங்கள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு பின்னர் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திற்கு ரவி மோகன் கெனிஷா உடன் வந்திருந்தார். இருவரும் கணவன் மனைவி போல உடை அணிந்து வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆர்த்தி ரவி மோகன் காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில் நிலைமை கை மீறி போனது. ரவி மோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளக் கூடாது என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ரவி மோகன் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என ஆர்த்தி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் ரவி மோகனும், கெனிஷாவும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கின்றன.
55
மாலையும் கழுத்துமாக ரவி மோகன் - கெனிஷா
இருவரும் குன்றக்குடி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்தான் அவை என கூறப்படுகிறது. ரவிமோகன் ஆர்த்தி விவாகரத்துக்கு பின்னர் பாடகி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் கவனம் பெற்று வருகின்றன. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த கெனிஷா தனது ஆத்ம நண்பரை கண்டுபிடித்து விட்டதாகவும், அவர் தன்னை பாதுகாப்பாகவும் அக்கறையாகவும் உணர வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.