இந்தியன் 2-வில் இரண்டு முக்கிய மாற்றம் செய்த ஷங்கர்... விவேக் கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

Published : Aug 24, 2022, 08:46 AM ISTUpdated : Aug 24, 2022, 10:46 AM IST

Indian 2 : இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், அதில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.

PREV
14
இந்தியன் 2-வில் இரண்டு முக்கிய மாற்றம் செய்த ஷங்கர்... விவேக் கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளராக உதயநிதியும் இணைந்துள்ளதால் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, இன்று முதல் அப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. 

24

இன்று சென்னை எழிலகத்தில் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இதில் பாபி சிம்ஹா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளதால் அவர் அடுத்த மாதம் தான் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைய உள்ளார். செப்டம்பர் 5-ந் தேதி முதல் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!

34
ரவி வர்மன், ரத்னவேலு

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இந்தியன் 2 ஆரம்பிக்கப்பட்ட போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணியாற்றி வந்தார். தற்போது வேறு படங்களில் அவர் பிசியாகி விட்டதால், அவருக்கு பதில் ரவி வர்மனை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியவர் ஆவார். ஏற்கனவே ஷங்கருடன் இணைந்து அந்நியன் படத்தில் பணியாற்றியுள்ள ரவிவர்மன் தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

44
விவேக், குரு சோமசுந்தரம்

அதேபோல் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு திடீரென மரணமடைந்து விட்டதால், தற்போது அவருக்கு பதில் பிரபல மலையாள நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். கமலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற விவேக்கின் ஆசை இந்தியன் 2 மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் விவேக் மரணமடைந்துவிட்டதால் அவர் நடித்த காட்சிகளை முழுவதுமாக நீக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது.

இதையும் படியுங்கள்...ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் ரிலீசாகும் அவதார் - டிரைலரோடு ரிலீஸ் தேதியையும் அறிவித்த ஜேம்ஸ் கேமரூன்

Read more Photos on
click me!

Recommended Stories