இந்தியன் 2-வை தட்டித்தூக்கிய உதயநிதி... கமலின் கெத்தான போஸ்டருடன் ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்

First Published | Aug 24, 2022, 8:00 AM IST

Indian 2 : லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இந்தியன் 2 படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசர வைத்திருப்பார் கமல். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தான் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமானது. கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடத்தப்பட்டது. இதன்பின்னர் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.

Tap to resize

கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றதால் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் சூழலுக்கு சென்றது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை அட்டாக் பண்ணிய கொரோனா

இந்நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு காரணம், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான். அவர் தற்போது இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் கமல் இந்தியன் தாத்தா கெட் அப்பில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள எழிலகத்தில் இன்று முதல் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நீல நிற கோட் அணிந்தது கிக் போஸ் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் நாயகி

Latest Videos

click me!