தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமாகி, பல வருட போராட்டங்களுக்கு பின் ஒரு நடிகராக ஜெயித்தவர் நடிகர் சூர்யா. இன்று இவர் முன்னணி ஹீரோவாக உள்ளார் என்றால் அதற்க்கு பின்னர் அவர் பட்ட பல வலிகளும் உள்ளது. அதையெல்லாம் கடந்து தான் இன்று தேசிய விருது நடிகராக உயர்ந்துள்ளார்.
Image: SuriyaInstagram
நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்து தரமான படங்களை தயாரித்து வருகின்றனர் சூர்யா - ஜோதிகா தம்பதி. அந்த வகையில், இவர்கள் தயாரிப்பில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்னர் வெளியான 'விருமன்' திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களுடன், வசூல் சாதனை செய்து வருகிறது.
இதை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையத்தில் உள்ள 2 வீலர் மற்றும் 4 வீலர் பார்க்கிங் காட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம். இதன்முலம், சூர்யாவிற்கு பல கோடி லாபம் கிடைத்து வருவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.