
ஜெயம் படம் மூலம் முதல் படத்திலேயே வெற்றியை கொடுத்த ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவருடைய அப்பா மோகன் பட தொகுப்பாளர் என்பதால், சிறுவயதில் இருந்தே தன்னுடைய மகனை நடிகராக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடனம், சண்டை பயிற்சி, நடிப்பு பயிற்சி போன்ற அனைத்தயும் சொல்லி கொடுத்து வளர்த்தார். ரவி மோகனின் அண்ணன் ஒரு இயக்குனர் என்பதால் தன்னுடைய அண்ணன் இயக்கத்திலேயே ரவி மோகன் நடிகராக களமிறங்கினார். இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான முதல் படமான 'ஜெயம்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த ரவி
இதை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த, எம்.ககுமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், போன்ற படங்கள் ரவி மோகனுக்கு திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!
ஆர்த்தி - ரவி மோகன் காதல்
ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்த பின்னர், கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் ரவி மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு அதிரடியாக தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு:
ஆர்த்திக்கு முன்பே, ரவி மோகன் தன்னுடைய விவாகரத்தை வெளிப்படையாக அறிவித்த நிலையில்... ஆர்த்தி தன்னுடைய கணவரை விட்டு பிரிய மனமில்லை என நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறார். ரவி மோகன் தரப்பில் இருந்து ஆர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவர்களுடைய விவாகரத்து வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் குழு ஒன்றும் அமர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இருவருக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனராக மாற உள்ள ரவி மோகன்
அதேநேரம் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை ஜெயம் ரவி அடியோடு மறுத்தார். தற்போது தன்னுடைய படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த படத்தை ரவி மோகன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.
ஆர்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ரவி மோகன்:
இந்நிலையில் ஆர்த்தி தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில்... நடிகையும் ஆர்த்தியின் குடும்ப நண்பருமான குஷ்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆர்த்திக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Why is Ravi Mohan's Instagram page trending? Khushbu's video!இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு ஏதேனும் வாழ்த்துக்கள் சொல்லி இருப்பாரா? என்கிற ஆர்வத்துடன் அவரது சமூக வலைதள பக்கத்தை அலசி ஆராய்ந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.