ஒரே நாளில் மோதும் சூரி, சந்தானம் படங்கள் – வசூல் குவிக்க போவது யார்?

Maaman vs DD Next Level Release Date : சூரி மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான மாமன் மற்றும் நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக வெளியாகிறது.

Soori Maaman and Santhanam DD Next Level Movies clash on 16 May 2025 in Tamil rsk

Maaman vs DD Next Level Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். ரஜினிகாந்த், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடி ரோலிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். பேசாத கண்ணும் பேசுமே படம் மூலமாக அறிமுகமான சந்தானம் அறை எண் 305ல் கடவுள் என்ற படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

Soori Maaman and Santhanam DD Next Level Movies clash on 16 May 2025 in Tamil rsk

காமெடி நடிகர் சந்தானம் - சூரி

அதன் பிறகும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க, அவரது இடத்தை சூரி தனது காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது சூரி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் காமெடி ரோலில் நடித்த சூரி இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோவாக அவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால், சூரியின் டிமாண்டும் கூடியது.


ஹீரோவான சூரியின் முதல் படம்:

விடுதலை படத்தின் மூலமாக தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிக் கொண்டார். கொட்டுக்காளி, விடுதலை 2, ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் இப்போது மாமன் மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மாமன்

தற்போது விலங்கு என்ற வெப் சீரிஸ் படம் மூலமாக பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மாமன் படத்தில் சூரி நடித்துள்ளார். இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண் மற்றும் சுவாசிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கிராமத்துக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாமன் ரிலீஸ் தேதி – டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி

இந்த நிலையில் தான் மாமன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே 16ஆம் தேதி மாமன் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சூரி மற்றும் சந்தானம் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே ஹீரோவாக சூரி பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நிலையில் மாமன் படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!