காந்தாரா சர்ச்சை முதல் கன்னடத்தில் நடிக்க தடை வரை... சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கொடுத்த நெத்தியடி பதில்

Published : Dec 10, 2022, 01:52 PM IST

ராஷ்மிகா கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

PREV
15
காந்தாரா சர்ச்சை முதல் கன்னடத்தில் நடிக்க தடை வரை... சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கொடுத்த நெத்தியடி பதில்

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவரை பேமஸ் ஆக்கிய தெலுங்கு திரையுலகம் தான். அங்கு விஜய் தேவரகொண்டா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ராஷ்மிகா. இதன் பின் இவருக்கு தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

25

அதன்படி தமிழில் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து உள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் 3 படங்களை கைவசம் வைத்து செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

35

அண்மையில் பாலிவுட் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தனது முதல் கன்னட படமான கிரிக் பார்ட்டி குறித்து பேசுகையில் அதன் தயாரிப்பாளரை குறிப்பிடாமல் பேசி இருந்தார். அதேபோல் சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன காந்தாரா படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை எனக்கூறியதை கேட்டு கன்னட சினிமா ரசிகர்கள் கடுப்பாகினர். இவ்வாறு தொடர்ந்து ராஷ்மிகா கன்னட சினிமாவை புறக்கணித்து வருவதால் அவர் கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

45

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும். உண்மை என்னன்னு அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே மாட்டேன். சினிமாவில் எனது நடிப்பை பற்றி ஏதேனும் குறை சொன்னால் அதை நான் திருத்திக் கொள்வேன் அதற்காக உழைப்பேன். 

55

ஆனால் எனது சொந்த வாழ்க்கை பற்றி பேசுபவர்களையும், அவர்களது பேச்சையும் கண்டுகொள்ளமாட்டேன். காந்தாரா பட சர்ச்சை குறித்து பதிலளித்த அவர், நான் படம் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை சொன்னேன். அதேபோல் கன்னட திரையுலகில் எனக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை” என ராஷ்மிகா கூறினார்.

இதையும் படியுங்கள்... சில்லா சில்லா vs ரஞ்சிதமே... எந்த பாட்டுக்கு மவுசு அதிகம்? வாரிசு பட சாதனையை தட்டிதூக்கியதா துணிவு?

Read more Photos on
click me!

Recommended Stories