விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இரண்டு படங்களின் ரிலீசுக்கும் இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் அப்படங்கள் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதனால் தற்போதே சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே மோதல் தொடங்கிவிட்டது.