கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பின்னர் இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த முதல் படமான கீதா கோவிந்தம் அதிரி புதிரியான வெற்றியை பெற்றதால், தொடர்ந்து டோலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார் ராஷ்மிகா.
இதையடுத்து தெலுங்கில் இவர் நடித்த டியர் காம்ரேட், தேவதாஸ், சரிலேரு நிகேவாரு, புஷ்பா போன்ற படங்களெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து ராஷ்மிகாவின் மார்க்கெட் மளமளவென உயரத் தொடங்கியது. பின்னர் கோலிவுட் பக்கம் வந்த ராஷ்மிகா கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், விஜய் உடன் வாரிசு போன்ற படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் பாலிவுட்டிலும் தடம் பதித்த ராஷ்மிகா, தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு 8 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.65 கோடி. இவரது மாத வருவாய் மட்டும் ரூ.60 லட்சம் இருக்குமாம். வருடத்திற்கு 8 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம் ராஷ்மிகா. சம்பளத்தை பொறுத்தவரை, இவர் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதுதவிர விளம்பரங்கள் மூலமாகவும் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் ராஷ்மிகா.
நடிகை ராஷ்மிகா சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடும் செய்து வருகிறாராம். நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாராம். குறிப்பாக பெங்களூருவில் ராஷ்மிகாவுக்கு சொந்தமாக மேன்ஷன் ஒன்றும் செயல்பட்டு வருகிறதாம். அதன் மதிப்பு மட்டும் ரூ.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர மும்பையில் அண்மையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கினார் ராஷ்மிகா.
நடிகை ராஷ்மிகாவுக்கு கார்கள் மீதும் மோகம் அதிகம். இவரிடம் தற்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி Q3, டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் கிரிட்டா போன்ற கார்கள் உள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனா கைவசம் தெலுங்கில் புஷ்பா 2 மற்றும் ஆர்.சி.16 ஆகிய படங்களும், தமிழில் ரெயின்போ என்கிற படமும், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பாவடை தாவணி அணிந்து... காதலனுடன் திருப்பதிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஜான்வி கபூர்... வைரலாகும் போட்டோஸ்