Rashmika Mandanna promoting Chhaava Movie : ராஷ்மிகா மந்தனா மற்றும் விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகியுள்ள சாவா படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தை பற்றி புரோமோஷன் செய்து வருகின்றனர்.
இயக்குநர் லட்சுமண் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சாவா. வரலாற்று காவிய கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் படக்குழுவினர் தற்போது சாவா படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26
'சாவா' படத்திற்கு எதிர்பார்ப்பு
அதன்படி, மும்பையில் உள்ள திரையரங்கிற்கு படக்குழுவினர் சென்றனர். அப்போது ரசிகர்கள் அவர்களை வரவேற்றனர். இந்த படம் சிவாஜி மகாராஜின் மகன் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் சம்பாஜியாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். மகாராஷ்டிர ரசிகர்கள் 'சாவா' படத்திற்கு பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். Sacnilk அறிக்கையின்படி, பிப்ரவரி 9 மாலை 4:45 மணி வரை முன்பதிவில் 60.2 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. 'சாவா' இதுவரை முன்பதிவில் 1.54 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
36
மலர்களால் வரவேற்பு
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மராட்டிய ராணி, மகாராணி யேசுபாய் போன்சலேவாக நடித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய, ராஷ்மிகா மந்தனா தனது ஓய்வு குறித்து பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த படத்தோடு நான் ஓய்வு பெற்றாலும் அது எனக்கு சந்தோஷம் தான்.
மும்பை பிளாசா தியேட்டரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ராஷ்மிகா காலில் அடிபட்டிருந்தாலும், கட்டு போடப்பட்டிருந்த நிலையில் தாவி தாவி நொண்டியடித்தபடி வந்தார். இந்த நிகழ்வில் பேசிய ராஷ்மிகா மந்தனா, இந்த ரோல் கொடுத்த மூவி டீமுக்கு நன்றி. மகாராணி யேசுபாயாக நடிப்பது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்.
நான் ஓய்வு பெற்றாலும் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார். சாவா படத்தில் அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா, வினீத் குமார் சிங், பிரதீப் ராவத், சந்தோஷ் ஜூவேகர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு பீலிங்ஸ் பாடலுக்கும் ரசிகர்கள் ரீல்ஸ் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். இன்றும் பீலிங்ஸ் பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.
66
ரஷ்மிகா & அக்ஷய் கண்ணா
இதற்கு முன்னதாக பாஜிராவ் மஸ்தானி, சைரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி, சாகுந்தலம், பொன்னியின் செல்வன் 2, பொன்னியின் செல்வன் 2, பாகுபலி, பாகுபலி 2, ருத்ரமாதேவி ஆகிய வரலாற்று காவிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் ஒரு சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.