தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எப்படி இருக்கு:
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளார். இரண்டு முறை தேசிய விருதை வாங்கி உள்ள தனுஷ், கடந்த சில வருடங்களாகவே திரைப்படம் நடிப்பதை தாண்டி இயக்கத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடித்து - இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
25
பா.பாண்டி படத்தில் தனுஷின் இயக்கம்
இந்த படத்தை பார்த்த, சூப்பர் ஸ்டாரும், முன்னாள் மாமனாருமான ரஜினிகாந்த் கூட மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார். இப்படி ஒரு சிறப்பான படைப்பு தனுஷ் வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் என ரஜினிகாந்த் அப்போது கூறியது தனுஷின் வெற்றிக்கு மகுடமாகவே பார்க்கப்பட்டது . அதேபோல் இயக்குனராக மட்டும் இன்றி, பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையாளராக இருக்கும் தனுஷ்... கடந்த ஆண்டு தன்னுடைய 50-ஆவது திரைப்படமான, ராயன் படத்தை இயக்கி நடித்தார்.
வசூல் ரீதியாகவும் - விமர்சன ரீதியாகவும் தனுஷுக்கு வெற்றியை கொடுத்தது இந்த படம். இந்த படத்தை இயக்கி முடித்த கையோடு, தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து தனுஷ் தன்னுடைய 3-ஆவது படமான, 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளது.
45
பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றம்:
பிரியங்கா மோகன், கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு ஸ்பெஷல் அப்பியரன்ஸாக வந்து ஆட்டம் போட்டு உள்ள நிலையில், தனுஷும் காதல் ஃபெயில் என்கிற பாடலில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். டீன் ஏஜ் பருவ மாணவர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, கலைப்புலி தாணு வி கிரியேஷன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இப்படத்தின் விமர்சனம் குறித்து அவர் கூறுகையில்... "நீண்ட நாட்களுக்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் வழக்கமான ஒரு காதல் கதையை கண்டு ரசித்தேன். ஆனாலும் தனுஷ் உருவாக்கியுள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இதைக் காணும் அனைவருக்குமே இந்த உற்சாகம் ஏற்படும். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே காதலின் அப்பாவித்தனத்தில் நிகழ்வது தான்" என தெரிவித்துள்ளார். வழக்கமான காதல் கதை என கூறியுள்ளதால்... அப்போ புதுசா தனுஷ் எதுவும் இந்த படத்துல மெசேஜ் கொடுக்கலையா? பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே... என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.