16 வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், முதல் படம் நடிக்கும் போதே பாரதிராஜாவிடம் அடிவாங்கி இருக்கிறார். அவரின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா கையால் அடிவாங்கினால் முன்னணி நடிகை ஆகிவிடலாம் என்கிற எழுதப்படாத விதி தமிழ் சினிமாவில் இருந்துள்ளது. 1980களில் கோலிவுட்டை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் பாரதிராஜாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் தன் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு R என்கிற பெயர் சூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் பெயர் சூட்டிய நடிகைகள் பலர் டாப் ஹீரோயின்களாக வலம் வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு நாயகியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த வகையில் பாரதிராஜா இயக்கிய படத்தின் மூலம் 16 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே பாரதிராஜா கையால் பளார் என அறை வாங்கி இருக்கிறார். அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
24
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை
அவர் வேறு யாருமில்லை நடிகை ரேவதி தான். இவரின் ஒரிஜினல் பெயர் ஆஷா. இவர் பாரதிராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் நடிக்கும் போது ரேவதிக்கு வெறும் 16 வயசு தானாம். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும் போது கண்ணீர் விட்டு அழ சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. ரேவதி எவ்வளவு முயன்றும் அழுகை வரவில்லையாம். இதனால் டென்ஷன் ஆன பாரதிராஜா, ரேவதிக்கு கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டிருக்கிறார். அவரிடம் அடிவாங்கிய பின் அழுகை வந்துவிட்டதாம். இதையடுத்து அந்த காட்சியையும் சக்சஸ்ஃபுல்லாக எடுத்து முடித்துவிட்டார்களாம்.
34
நடிகை ரேவதி பிறந்தநாள்
பாரதிராஜாவிடம் அடிவாங்கியதை பெருமையாக கருதும் நடிகை ரேவதி, அந்த அறை தான் நான் முன்னணி நடிகையாக உயர்ந்ததற்கு காரணம் என ரேவதி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் கிளாமர் வேடங்களிலேயே நடிக்காமல், ஹோம்லியாகவே நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ரேவதி. நடிகை ரேவதி இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சினிமாவில் சில ஆண்டுகள் விலகி இருந்த ரேவதி, தற்போது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளாராம்.
நடிகை ரேவதி தமிழில் மெளன ராகம், அஞ்சலி, தேவர் மகன் உள்பட ஏராளமான மாஸ்டர் பீஸ் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்துள்ளார். இவர் இயக்கிய முதல் படம் Mitr, My Friend. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து கேரளா கஃபே, மும்பை கட்டிங், சலாம் வெங்கி போன்ற படங்களை இயக்கிய ரேவதி, அண்மையில் ரிலீஸ் ஆன Good Wife என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதில் ஆரி அர்ஜுனன், பிரியாமணி, சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.