ஓடிடி தளங்களில் கடந்த ஜூன் 30ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.
ஓடிடி தளங்களின் வளர்ச்சியால், தற்போது படங்கள் மற்றும் வெப் தொடர்கள் நேரடியாக ஓடிடி தளங்களுக்காகவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களை விட ஓடிடியில் பார்ப்பவர்கள் தான் அதிகம். உலகத்தில் எந்த மொழியில் ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் அதை வீட்டில் இருந்தபடியே பார்க்க முடியும் என்பதால் ஓடிடி தளங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. தியேட்டர்களில் படங்கள் வார வாரம் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடி தளங்களிலும் வார வாரம் புதுப் படங்கள் போட்டி போட்டு வெளியான வண்ணம் உள்ளன. அப்படி வெளியானவற்றில் கடந்த ஜூன் 30ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
24
டாப் 5-ல் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷின் உப்பு கப்புரம்பு
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் Heads of State என்கிற ஹாலிவுட் திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த ஒரு வாரத்தில் 17 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன உப்பு கப்புரம்பு திரைப்படம் உள்ளது. சசி இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் சுஹாஸ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை படமான இது அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகி 20 லட்சம் பார்வைகளை பெற்றிருந்தது.
34
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் கடந்த ஜூன் 5ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம் தக் லைஃப். திரையரங்குகளில் படுதோல்வியடைந்த இப்படத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தனர். இருப்பினும் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் 24 லட்சம் பார்வைகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தக் லைஃப். இந்த பட்டியலில் அக்ஷய் குமார் நடித்த கேசரி சாப்டர் 2 மற்றும் அஜய் தேவ்கனின் ரெய்டு 2 ஆகிய படங்கள் முறையே 2 மற்றும் 1ம் இடத்தை ஆக்கிரமித்து உள்ளன. இதில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் கேசரி சாப்டர் 2 படம் 30 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. அதேபோல் முதலிடத்தில் உள்ள ரெய்டு 2 திரைப்படம் 55 லட்சம் வியூஸ் உடன் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 வெப் தொடர்கள்
வெப் தொடர்கள் ஓடிடிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்கள் பட்டியலில் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வரும் தி டிரெய்டர்ஸ் திரைப்படம் 31 லட்சம் பார்வைகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 3 நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் 32 லட்சம் பார்வைகளை பெற்று 4-ம் இடத்தில் உள்ளது. Criminal Justice: A Family Matter என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் 48 லட்சம் வியூஸ் உடன் 3ம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் ஸ்குவிட் கேம் சீசன் 3 வெப் தொடர் 60 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை பஞ்சாயத் சீசன் 4 என்கிற வெப் தொடர் தான் பிடித்துள்ளது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 78 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.