ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இதில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இதுதவிர யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜெயிலர் படத்தை பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்பதால் தான் இப்படத்தில் பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... மாட்டிவிட்டுட்டியே பங்கு... நடிகர் தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அமபலப்படுத்திய ரோபோ சங்கர்
வழக்கமாக ரஜினி படத்துடன் போட்டியிட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தயங்குவதுண்டு. அப்படித்தான் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயிலர் படமும் அந்த நேரத்தில் ரிலீஸ் ஆவதை அறிந்த சிவகார்த்திகேயன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக மாவீரன் படத்தை ஜூலை 14-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
மாவீரனை தொடர்ந்து ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக இருந்த மற்றொரு படமும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதை அறிந்த அவர்கள், ரஜினிக்கு பாலிவுட்டில் இருக்கும் மார்க்கெட்டை பற்றி விசாரித்து பார்த்துவிட்டு, சூப்பர்ஸ்டாரோடு மோதினால் நமக்கு தான் அதிகம் டேமேஜ் ஆகும் என்பதை உணர்ந்து அனிமல் படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர். பாலிவுட்டிற்கே பயம் காட்டியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி அவரது ரசிகர்கள் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அரசியலில் தீவிரம்! தளபதி 68 படத்திற்கு பின் ஒர்க் அவுட் ஆகுமா விஜய் போடும் 3 வருட மாஸ்டர் பிளான்? ஷாக்கிங் தகவல்