ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி ராம்சரண் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் போட்டிருக்கும் வரிக்குதிரை டிசைன் சட்டையின் விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சமாம்.