தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங், இவர் சமீபத்தில் கட்புட்ல்லி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். செப்டம்பர் 2ஆம் தேதிவெளியாகவுள்ள இந்த படம் தொடர் கொலை காரனை தேடும் போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
26
Rakul Preet SIngh
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை அன்று பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்பட்டது. இந்தப் படம் தமிழில் ராட்சசன் என்ற பெயரில் வந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். உளவியல் திரில்லரின் ட்ரெய்லர் பிரீமியர் நிகழ்ச்சியில் ஸ்டைலாக வந்திருந்தார் ரகுல் ப்ரீத்தி சிங்.
தொடையழகு தெரியும்படி கிளாமராக பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த இவரின் புகைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
46
Rakul Preet SIngh
அதோடு பல ஹிந்தி படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இவர் முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு யுவன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதை அடுத்து தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இருந்தும் இவருக்கு போதுமான வரவேற்பு இங்கு கிடைக்காத காரணத்தால் மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பினார். பின்னர் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான ஸ்பைடர் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
66
Rakul Preet SIngh
இதை அடுத்து அதே ஆண்டில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு நாயகியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்தி சிங். மீண்டும் தேவ் படத்திலும் கார்த்திவுடன் ஜோடி போட்டிருந்தார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு சூர்யா நடித்த என் ஜி கே படத்தில் அரசியல் வெற்றிகளை கணிக்கும் கணிப்பாளராக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட் தெலுங்கு என பிசியாக இருந்த ரகுல் ப்ரீத்தி தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இவரின் கட்புட்ல்லி படத்தின் ப்ரோமோஷன்காக கொடுத்திருந்த போஸ்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.