கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷபானா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல் நடித்து வந்த நிலையில், தற்போது நியூ லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிரியா ராமன், ஷபானாம், அகினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று.
26
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷபானா. கடந்த ஆண்டு விஜய் டிவி 'பாக்யலட்சுமி' சீரியல் நடிகராக நடித்து வந்த ஆர்யனை திடீர் என திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
திருமணம் முடிந்த கையேடு, இருதரப்பு பெற்றோரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், ஷபானா - ஆர்யன் இருவருமே திருமணமான ஒரே மாதத்தில் பிரிய உள்ளதாகவும் கூறப்பட்டது.
46
ஆனால் அப்படி பரவி வந்தது வதந்தி என்பதை நிரூபித்து, ஆர்யனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஷபானா. அவ்வப்போது இருவரும், தங்களுடைய புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஷபானா, சமீபத்தில் தான் இந்த சீரியல் நிறைவடைந்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியியேறினார்.
66
சீரியல் முடிந்து , வெளியேறி விட்டதால்... தன்னுடைய லுக்கை செம்ம ஸ்டைலிஷாக மாற்றியுள்ளார். தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலில் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.