தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்ஸி பண்ணு இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் அறிமுகமாகி இருந்தா.ர் இதை அடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆடுகளம் என்னும் படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார். வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தங்களா? என்னும் அளவிற்கு செக்க செவேர் என இருக்கும் இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
27
Taapsee Pannu
இருந்தும் இவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறலாம். பின்னர் தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என திரும்பிவிட்ட அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மீண்டும் 2013ஆம் ஆண்டு ஆரம்பம் படத்தின் மூலம் தமிழுக்கு ரி என்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்னும் படத்தில் நடித்திருந்த டாப்சி பண்ணு, காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பல வருட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் படங்களில் நடித்திருந்தார்.
தற்போது ஜன கன மன, ஏலியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் தோன்றுகிறார் டாப்ஸி. முன்னணி நாயகியாகி விட்ட இவர் தனக்கான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து எடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் டோபாரா என்னும் படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் மூன்றாவது நாளில் 2.84 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் 72 லட்சங்களை மட்டுமே வசூலித்திருந்தது. இரண்டாம் நாளில் 70 லட்சத்தை வசூலித்து மொத்தம் 1.2 கோடியாக இருந்தது. தற்போது மூன்றாவது நாள் முடிவில் படத்தின் வசூல் சற்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
67
Taapsee Pannu
இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான மிராஜ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி உள்ள மர்ம நாடகமாக திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக லண்டன் இந்திய திரைப்பட விழா 2022 இந்தப் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று இருந்தது.
77
Taapsee Pannu
முன்பு ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின் போது இறந்த 12 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பை பெறும் ஒரு பெண்ணை சுற்றியே டோபரா கதை சுழல்கிறது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடும் டாப்ஸி தற்போது பச்சை நிற சேலையில் கருப்பு நிற வளவளப்பான பிளவுஸ் அணிந்து கொடுத்துள்ள ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.