நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்தும் ரஜினிகாந்த்

First Published Jun 21, 2022, 9:12 PM IST

விஜயகாந்த் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், வலது காலில் உள்ள பெருவிரல் பகுதிக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், கால்விரல்களை அகற்ற வேண்டியதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

VIJAYAKANTH

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த விஜயகாந்த், 2005ல் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சி 2006 தேர்தலில் போட்டியிட்டு 8.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தச் செயல்பாடு பல அரசியல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. பின்னர் எதிர் கட்சி தலைவராக மாஸ் காட்டினார். பின்னர் உடல் நிலை காரணமாக பொது வெளிக்கு வராமல் இருந்தார் விஜயகாந்த். இதனால் தேமுதிக தொடர் தோல்விகளை சந்தித்தாக சொல்லப்படுகிறது.

VIJAYAKANTH

தங்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மூன்று கால்விரல்களை அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. விஜயகாந்த் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், வலது காலில் உள்ள பெருவிரல் பகுதிக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், கால்விரல்களை அகற்ற வேண்டியதுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை திங்கட்கிழமை இடம்பெற்றதாக கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Vijayakanth

இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல், 2016-ம் ஆண்டு முதல் மாநிலத்தில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில் தங்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மூன்று கால்விரல்களை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று  மருத்துவர்கள் கூறியுள்ளதாக தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

vijayakanth

 விஜயகாந்த் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், வலது காலில் உள்ள பெருவிரல் பகுதிக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், கால்விரல்களை அகற்ற வேண்டியதுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை திங்கட்கிழமை இடம்பெற்றதாக கட்சி மேலும் தெரிவித்துள்ளது. அதோடு தேமுதிக தலைவர் மருத்துவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு நலமாக இருக்கிறார் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

vijayakanth

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் தனது ட்வீட் பக்கத்தில் , "என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என கூறியுள்ளார்.

click me!