ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ' யானை ' படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மே 6-ம் தேதி என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு பின்னர் ஜூன் 17ம் தேதியானது. இதையடுத்து ஜூலை 1 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கிராமப்புற பொழுதுபோக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், குக்கு வித் கோமாளி ராஜேந்திரன் ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ராமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
34
yaanai movie
நடிகர் அருண் விஜய் தற்போது தனது யானை படத்தை ஜூலை 1 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூரில் யானை படத்தை விளம்பரப்படுத்தும் போது, கதை பிடித்திருந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அருண் கூறினார்.
முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அருண் விஜய். வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை வென்றார். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கும் அருண் பரிந்துரைக்கப்பட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.