ரஜினிகாந்த் vs தளபதி விஜய்: யார் பெரிய பணக்காரர்? இருவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Dec 29, 2025, 03:06 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அவர்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
14
Vijay vs Rajinikanth Net Worth

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது கடைசி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். 'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விடைபெறுகிறார். இதுவே தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, நடிகர் ரஜினிகாந்தும் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாகக் கூறப்படுகிறது. தற்போது, நடிகர் ரஜினிகாந்த் மல்டி ஸ்டாரர் படமான 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதன் பிறகு இரண்டு படங்களுடன் ரஜினிகாந்த் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரில் யார் அதிக பணக்காரர்? யாருடைய சொத்து மதிப்பு எவ்வளவு? இருவரின் சம்பளம் எவ்வளவு? ரஜினிகாந்தை விட விஜய்க்கு அதிக சொத்து இருக்கிறதா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
யாருடைய சொத்து மதிப்பு அதிகம்?

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு சுமார் 430 கோடியாகவும், விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 600 கோடியாகவும் உள்ளது. சம்பள விஷயத்தில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளி விஜய் தனது 'ஜனநாயகன்' படத்திற்காக 275 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தனது 'ஜெயிலர் 2' படத்திற்காக 200-230 கோடி ரூபாய் பெறுவதாகத் தெரிகிறது.

34
வசூலில் யார் முன்னிலை?

ஆனால், படங்களின் எண்ணிக்கையில் ரஜினிகாந்த் விஜய்யை விட முன்னணியில் உள்ளார். ரஜினி 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், விஜய்யின் படங்களின் எண்ணிக்கை 69. அதிக வசூல் செய்த தமிழ் படத்தில் நடித்தவர் என்ற பெருமை ரஜினிக்கு உண்டு. IMDb அறிக்கையின்படி, 2018ல் வெளியான ரஜினியின் '2.0' உலகளவில் 675 கோடி வசூலித்தது. விஜய்யின் 'லியோ' 618 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

44
விஜய் - ரஜினி கைவசம் உள்ள படங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' 2026ம் ஆண்டு ஜூன் 12ந் தேதி அன்று வெளியாக வாய்ப்புள்ளது. இது 2023ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாகும். மற்றொரு படமான 'தலைவர் 173' 2027ல் வெளியாகும். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9ந் தேதி அன்று வெளியாகும். இந்தப் படத்திற்குப் பிறகு, விஜய் சினிமா துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories