பயமா இருக்கு, காப்பாற்றுங்க; அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Published : Dec 29, 2025, 02:49 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 675ஆவது எபிசோடானது காந்திமதி குடும்பத்தின் காட்சிகளுடன் ஆரம்பித்து கோமதி, ராஜீ தொடர்பான காட்சிகளுடன் முடிந்துள்ளது.

PREV
16
Pandian Stores 2 Serial Today 675th Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 675ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோமதி, ராஜீ மற்றும் அரசியை போலீஸ் அழைத்து செல்வதை வேடிக்கை பார்த்த காந்திமதி தனது மருமகள்களிடம் சொல்லி அழுதார். அவர்களும் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் பதற்றத்தில் இருக்கும் நிலையில் முத்துவேல் மற்றும் சக்திவேல், குமரவேல் ஆகியோர் வீட்டிற்கு வருகின்றனர்.

26
Pandian Stores 2 Serial Raji Emotional Scenes

என்ன ஆச்சு கேட்கும் போது மாரி மற்றும் வடிவு என்ன நடந்த்து என்பது பற்றி கூறுகிறார்கள். நாங்கள் கோயிலுக்கு சென்றுவிட்டோம். அத்தை மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள். ஏதோ தங்கமயில் வீட்டால் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார்களாம். அதனால், இவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றனர்.

36
Pandian Stores 2 Serial today 675th episode

மேலும், என்னங்க ஆயிரம் தான் இருந்தாலும் என்று ஆரம்பிப்பதற்குள் ம்ம்.. என் வீட்டு பெண்களுக்கு என்ன நடந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதற்கு நான் ஒன்றும் கல் நெஞ்சுக்காரன் இல்லை என்று சொல்லி உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பினார். இதற்கிடையில் உங்கள் மகளை ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சொல்லவே பாக்கியம் பதற்றமடைந்தார்.

46
Pandian Stores 2 Serial Police Station Episode

நல்ல குடும்பத்தில் பிறந்த யாரும் ஸ்டேஷனுக்கு வரமாட்டாங்க. அதெப்படி மேடம் அவளை இங்கு கூட்டிக் கொண்டு வருவது. அவளுக்கு உடம்பு சரியில்லை. 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அப்படி இப்படி என்று டிராமா போட்டார். அதனால், வேறு வழியில்லாமல் கான்ஸ்டபிளை வர சொல்லி எஸ் ஐ உடன் தங்கமயில் வீட்டிற்கு சென்று ஸ்டேட்மெண்ட் வாங்கி வர சொன்னார்.

56
Pandian stores 2 serial today episode highlights

பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் ஸ்டேஷனிலேயே டிராமாவை அரங்கேற்றினார்கள். இதைத் தொடர்ந்து செந்திலுக்கு தனது மனைவி மீனாவும் இங்கு வந்துவிடுவாளோ என்ற பயம் வேறு. அவருக்கு போன் போட்டு நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம். தங்கமயில் எங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். நான் மட்டும் இல்ல அப்பா, அம்மா, அண்ணன், கதிர், ராஜீ, அரசி என்று எல்லோரும் ஸ்டேஷனில் தான் இருக்கிறோம் என்று சொல்லவே மீனா அதிர்ச்சி அடைந்தார்.

66
Raji Emotional breakdown

இதைத் தொடர்ந்து தனது மகளுக்கு ஒன்று என்றதும் துடிதுடித்துப் போன முத்துவேல் தனது தம்பி சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரவேல் ஆகியோருடன் ஸ்டேஷனுக்கு வந்தார். அவர்களை பார்த்த பாண்டியன், சரவணன், செந்தில் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ராஜீ அவரது அப்பாவை பார்த்ததும், கண்ணீர் விட்டு கதறி அழுதார். பயமாக இருக்கு அப்பா, காப்பாற்றுங்கள் என்று கூறினார். மகள் அழுவதை பார்த்த முத்துவேலும் கண்ணீர் வடித்தார். மகளுக்கு ஆறுதல் கூறினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய காட்சி முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories