கடை திறப்பு விழாவில் கலவரம்... விசாலாட்சியை பாசத்தால் அடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Dec 29, 2025, 01:06 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடை திறப்பு விழா நடக்கும் இடத்தில் கலவரம் வெடித்திருக்கிறது. மறுபுறம் விசாலாட்சியிடம் போனில் பேசி உள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடை திறப்பு விழா நடக்கும் இடத்துக்கு தமிழ் சோறு ஃபுட் டிரக்கை எடுத்து வந்து நிறுத்திய ஜனனியிடம் அந்த இடத்தின் ஓனர் ஏற்பாடு செய்த ஆட்கள் பேசிப்பார்த்தும், ஜனனி அங்கிருந்து வெளியேற மறுத்துவிடுகிறார். அவருக்கு ஐந்து நிமிஷம் டைம் கொடுக்கும் ரெளடிகள், அதற்குள் இடத்தை காலிபண்ணாவிட்டால் வண்டியை அடித்து உடைத்துவிடுவோம் என மிரட்டுகிறார். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத ஜனனி, இங்கு கடை திறப்பு விழாவை நடத்துவோம் நீ என்ன வேணா பண்ணிக்கோ என சவால்விடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
கடை திறப்பு விழாவுக்கு சிக்கல்

ரெளடிகள் எதிர்ப்பதால், கடையை இந்த இடத்தில் போடாமல் ரோட்டில் போடலாமா என ஜனனியிடம் கேட்கிறார் சக்தி. ஆனால் ஜனனி அதெல்லாம் முடியவே முடியாது, ரோட்டில் கடை போட நாம் பர்மிஷன் வாங்கவில்லை. இந்த இடத்தில் போட தான் வாங்கி இருக்கிறோம். ரோட்டில் போட வேண்டும் என்றால் நிறைய நடைமுறை இருக்கிறது. அதனால் தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என சொல்கிறார் ஜனனி. பின்னர் நந்தினி அந்த ரெளடிகளிடம் சென்று செண்டிமெண்டாக பேசுகிறார். ஆனால் அதற்கும் அவர்கள் அடிபணியவில்லை. இதையடுத்து அந்த இடத்துக்கு தாரா ஆட்டோவில் வருகிறார். விசாலாட்சி தான் தன்னை அனுப்பி வைத்ததாக கூறுகிறார்.

34
மனம் மாறும் விசாலாட்சி

மறுபுறம் விசாலாட்சி வீட்டில் இருந்து கடை திறப்பு விழாவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது, அறிவுக்கரசிக்கு போன் போட்ட ஆதி குணசேகரன், போனை அம்மாகிட்ட கொடுக்க சொல்கிறார். அப்போது விசாலாட்சி போனை வாங்க மறுக்க, ஸ்பீக்கரில் போட்டு பேசுகிறார் குணசேகரன். நீ நல்லா இருக்கம்மா, ஆனா நான் உன் பிள்ளை இங்க நல்லா இல்ல. எனக்கு எதிராவே சாட்சி சொல்ற அளவுக்கு வந்துட்ட, உன் பிள்ளைகளை நினைச்சு பாத்தியா என செண்டிமெண்டாக பேசிய அவர், நீ அந்த கடை திறப்பு விழாவுக்கு செல்லக்கூடாது என்று சொல்கிறார். மகன் மீதுள்ள பாசத்தால் கடைதிறப்பு விழாவுக்கு செல்லாமல் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறார் விசாலாட்சி.

44
இருதரப்பு மோதலால் பரபரப்பு

கடை திறப்பு விழா நடக்கும் இடத்தை ஜனனி முற்றுகையிட்டு நிற்க, பொறுமை இழக்கும் ரெளடிகள், அங்கிருந்த ஃபுட் டிரக்கை அடித்து நொறுக்க செல்கிறார்கள். அப்போது அவர்களை அனைவரும் சேர்ந்து தடுக்கிறார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடிக்க, அந்த இடமே கலவர பூமியாக மாறுகிறது. அந்த சமயத்தில் அங்கு கொற்றவை எண்ட்ரி கொடுத்து, இரு தரப்பினரையும் பிரித்துவிடுகிறார். அந்த ரெளடிகளை பார்த்து நீங்க குணசேகரன் சொல்லி தான் இப்படி செய்கிறீர்கள் என்பது எனக்கு நல்லா தெரியும் என சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது? கடைதிறப்பு விழா வெற்றிகரமாக நடந்ததா இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories