'ஜெய்பீம்' பட இயக்குனர், TJ ஞானவேல் இயக்கத்தில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து வெளியான திரைப்படம் 'வேட்டையன்'.
24
Vettaiyan Movie Collection Update
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இரண்டாவது வாரத்தை எட்டவுள்ள இந்த திரைப்படம், 11 நாட்களில் உலக அளவில் இதுவரை 235 கோடி மேல் வசூலித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சுமார் ரூ.99 கோடி வசூலித்துள்ள நிலையில், விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது. 'ஜெயிலர்' படத்திற்கு பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க, அமிதாப்பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில், ரானா டகுபதி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருந்த இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக சமீப காலமாக நடைபெறும் நீட் கோச்சிங் என்ற பெயரில் நடக்கும் சில மோசடிகளை இப்படம் வெளிச்சம் போட்டி காட்டியிருந்தது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
44
Vettaiyan OTT Release Date
அந்தவகையில், இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது. எனவே பிரைம் வீடியோவில் நவம்பர் 7 அல்லது 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஓடிடி ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.