நாக சைதன்யாவை கரம்பிடிக்க ரெடியான சோபிதா; களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்!

First Published | Oct 21, 2024, 2:12 PM IST

Sobhita Dhulipala Haldi Function : நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த சோபிதா அவரை கரம்பிடிக்க உள்ள நிலையில், இன்று ஹல்தி கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது.

sobitha Dhulipala Haldi Function

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்து அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து பிரிந்தார். சமந்தாவை பிரிந்த கையோடு, நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார் நாக சைதன்யா. பர்த்டே பார்ட்டியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகவே நெருங்கி பழகினர். பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியதால் இருவரும் திருமணத்துக்கு தயாராகிவிட்டனர்.

sobitha Dhulipala Haldi Function

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர். இந்தியாவில் ஜோடியாக சுற்றினால் விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ரொமான்ஸ் செய்து வந்தனர். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று லீக் ஆகிவிட்டது.

Tap to resize

sobitha Dhulipala Haldi Function

இருப்பினும் இருவரும் தங்கள் காதல் பற்றி மனம் திறக்காமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாக சைதன்யா - சோபிதா ஜோடிக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்கள இருவரது நிச்சயதார்த்த நிகழ்வில் இருவீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... செல்பி எடுத்தது குத்தமா? நாக சைதன்யா - சோபிதா ஜோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; காரணம் என்ன?

sobitha Dhulipala Haldi Function

அதன்பின்னர் அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நாகார்ஜுனா, தன் மகனின் இரண்டாவது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமின்றி சோபிதாவை பற்றியும் புகழ்ந்து பேசி இருந்தார். 

sobitha Dhulipala Haldi Function

நடிகை சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்கிற கேரக்டரில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என அவரின் மார்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

sobitha Dhulipala Haldi Function

இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் சோபிதா தற்போது திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறார். அவருக்கு இன்று ஹல்தி பங்க்‌ஷன் நடைபெற்று உள்ளது. அதில் பட்டுச் சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி ஹல்தியை கொண்டாடி இருக்கிறார் சோபிதா.

sobitha Dhulipala Haldi Function

ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சோபிதா, திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தால் 100 கோடியை இழந்த நாகார்ஜுனா - காரணம் என்ன?

Latest Videos

click me!