சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரே கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
சாதாரண பஸ் கண்டெக்டராக இருந்து தன்னுடைய உழைப்பால் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ரஜினிகாந்த். சினிமாவில் சாதிக்க வேண்டும் என கனவோடு இருக்கும் பலருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான ரஜினிகாந்துக்கு தற்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் செம பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது கைவசம் கூலி மற்றும் ஜெயிலர் என இரண்டு பிரம்மாண்ட படங்களை வைத்திருக்கும் ரஜினி, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
25
ரஜினியின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் அதிகளவில் வெற்றிப்படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் மயங்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினி. அதுமட்டுமின்றி சினிமாவில் கருப்பாக இருப்பவர்கள் ஹீரோவாக நடிக்க முடியாது என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவரும் ரஜினி தான். இப்படி தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்து வரும் ரஜினிகாந்த், ஒரே கதையில் உருவான இரண்டு வெவ்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.
35
ஒரே கதையில் வெளிவந்த ரஜினியின் இரண்டு படங்கள்
ரஜினிகாந்த் நடித்து 1982-ம் ஆண்டு வெளிவந்த போக்கிரி ராஜா திரைப்படமும், 1989-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜாதி ராஜா படமும் ஒரே கதை தான். இந்த இரண்டு படங்களிலுமே ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இரண்டிலுமே வில்லன்கள் ஒரு கொலை செய்து அந்த பழியை தூக்கி ஒரு ரஜினி மேல் போட்டுவிடுவார்கள். பழிபோட்ட ரஜினிக்கு பதிலாக இன்னொரு ரஜினி சிறையில் இருப்பார். கடைசியில் யார் உண்மையான கொலையாளி என்பதை கண்டுபிடித்து மற்றொரு ரஜினியை காப்பாற்றுவார். இந்த இரண்டு படங்களுமே 80ஸில் வெளிவந்ததுதான். இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வெற்றி பெற்றது.
இதில் மற்றொரு ஷாக்கிங் தகவல் என்னவென்றால், முதலில் ரிலீஸ் ஆன போக்கிரி ராஜா திரைப்படமே ஒரு ரீமேக் படம் தான். இது தெலுங்கில் 1980ம் ஆண்டு வெளியான Chuttalunnaru Jagratha என்கிற படத்தின் ரீமேக் தான். இந்த படத்தை தான் தமிழில் போக்கிரி ராஜா என்கிற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் ரஜினி உடன் ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். 1982ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
55
ராஜாதி ராஜா
அதே கதையம்சத்தோடு 1989-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ரஜினியின் ராஜாதி ராஜா திரைப்படத்தை பி சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதா மற்றும் நதியா நடித்திருந்தனர். இப்படம் 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களுக்குமே திரைக்கதை அமைத்தது பஞ்சு அருணாச்சலம் தான்.