அரிசி மூட்டை தூக்கின கூலி நான்..! கண்ணீர் வரவைக்கும் ரஜினிகாந்தின் சொந்தக் கதை

Published : Aug 11, 2025, 12:37 PM IST

நடிகர் ரஜினிகாந்த், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, தான் கூலியாக பணியாற்றியபோது சந்தித்த கஷ்டங்களை கூறி இருக்கிறார்.

PREV
14
Rajinikanth Working as Coolie in Real Life

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தான் நிஜ வாழ்க்கையிலும் கூலியாக வேலை பார்த்த கதையை கூறி இருக்கிறார். இளம் வயதில் தான் கூலியாக வேலை பார்த்த போது சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன என்பதை பேசி இருக்கிறார். மேலும் கூலியாக வேலை பார்த்த தன்னை சினிமாவுக்குள் கொண்டு வந்த தன்னுடைய நண்பன் ராஜ் பஹதூருக்கும் நன்றி தெரிவித்தார் ரஜினி.

24
வீட்டை விட்டு ஓடி வந்த ரஜினிகாந்த்

அதில் அவர் பேசியதாவது : கூலி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். நான் கண்டக்டரா வேலை பார்க்கும் முன் கூலியாக தான் இருந்தேன். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். என் அண்ணாவுக்கு 90 ரூபா தான் சம்பளம் அவருக்கு என்னை படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. நான் கண்டிப்பா பாஸ் ஆக மாட்டேன்னு எனக்கு தெரியும். அது தெரிஞ்சும் என்ன நல்ல ஒரு பிரைவேட் காலேஜ்ல சேர்த்துவிட்டார். கல்லூரியில் படிக்கும்போது தேர்வுக்கு 170 ரூபாய் பணம் கட்ட சொன்னார்கள். உடனே வீட்டில் கேட்டேன். அந்த ரூபாயை கொடுத்தார்கள்.

அந்த காசை கட்டி தேர்வு எழுதினாலும் கண்டிப்பா பாஸ் ஆக மாட்டேன்னு தெரியும். அதனால் அந்த காசை எடுத்துக் கொண்டு மெட்ராஸ் ஓடி வந்துட்டேன். சினிமா மீதிருந்த ஆசையால் வந்தேன். ஆனால் இங்க சினிமாவில் லைட்மேன் வேலை கூட கிடைக்கல. அதன்பின் சர்வர் வேலை தேடினேன். அதுவும் கிடைக்கல. கையில் இருந்த காசு எல்லாம் காலி. மறுபடியும் வீட்டுக்கே சென்றுவிட்டேன். செம அடி விழும்னு எதிர்பார்த்தேன். ஆனால் வீட்டில் எல்லாருமே அமைதியா இருந்தார்கள். என்னுடைய தந்தை என்னிடம் சொன்னார், நாளையில் இருந்து கூலி வேலைக்கு செல் என்றார்.

34
கூலி வேலைக்கு சென்ற ரஜினி

என்னுடைய அக்காவின் கணவர் மண்டிபேட்டில் உள்ள டிரேடிங் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தார். அவரிடம் பேசி அங்கு வேலைக்கு சேர்த்துவிட்டார்கள். அப்போது 100 கிலோ எடை கொண்ட 1 அரிசி மூட்டையை தூக்கிச் சென்றால் 10 பைசா சம்பளம். அரிசி வாங்க வருபவர்களின் டெம்போவில் அந்த அரிசி மூட்டையை சுமந்து சென்று வைத்தால் 50 பைசா கொடுப்பார்கள். அதேபோல் ஒரு 500 மீட்டர் தொலைவில் இருக்கும் கடைகளுக்கு மூட்டையை சுமந்து சென்று டெலிவரி செய்தால் 5 ரூபாய் கிடைக்கும்.

ஒரு நாள் ஒரு கடையில் இருந்து 3 மூட்டை அரிசி வேணும் என கேட்கிறார்கள். 500 மீட்டர் தான் நீ கொண்டு போனு எங்க மாமா சொன்னார். வண்டிக்கு 5 ரூபா போச்சுனா 10 ரூபா உனக்கு கிடைக்கும்னு சொன்னார். சரினு நானும் வண்டிய எடுத்துட்டு போனேன். அங்கு ஒரு விபத்து நடந்ததால், நான் 500 மீட்டரில் கொண்டு டெலிவரி செய்ய வேண்டிய கடைக்கு ஒன்றரை கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை வந்தது. கஷ்டப்பட்டு டெலிவரி செய்துவிட்டு களைப்போடு படுத்திருந்தேன். திரும்பவும் ஒரு 3 மூட்டை டெம்போவில் ஏற்ற சொன்னார்கள்.

44
பர்ஸ்ட் டைம் அழுதேன்

சரினு ஏத்திவிட்டேன். அப்போ ஒருத்தன் 2 ரூபா டிப்ஸ் கொடுத்தான். இந்த குரலை எங்கயோ கேட்டிருக்கேனே என்று பார்த்தால், அது என்னுடன் கல்லூரியில் படித்த முனிசாமி என்பவர். கல்லூரியில் நான் அவனை ரொம்ப கிண்டல் பண்ணுவேன். அப்போ அவன் என்னை பார்த்து, என்ன ஆட்டம் ஆடுனடானு சொன்னான். அதன்பின் ரொம்ப ஃபீல் பண்ணி அப்படியே மூட்டையில் உட்கார்ந்து வாழ்க்கையில் பர்ஸ்ட் டைம் அழுதேன்.

எங்கப்பா பிஆர்ஓ மாதிரி வந்து, என்னுடைய முதல் மகன் கார்பரேஷனில் வேலை பார்க்கிறான். இரண்டாவது பையன் மிலிட்டரி. மூன்றாவது பையன் பணம் எடுத்துட்டு மெட்ராஸ் ஓடிட்டான், இப்போ கூலி வேலை செய்றான்னு சொல்வார். பார்க்கிற எல்லாரிடமும் சொல்வார். என்னுடைய இரண்டாவது அண்ணனுடைய மாமனான் டிக்கெட் கலெக்டராக வேலை பார்த்தார். அவர் தான் என்னை கண்டெக்டர் லைசன்ஸ் வாங்க சொன்னார். அது வாங்கியதால் தான் கண்டெக்டர் ஆனேன், அங்க ராஜ் பஹதூர் கிடைச்சான் சினிமா ஆர்டிஸ்ட் ஆகிட்டேன்” என கூறினார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories