எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தாக்கியதில் காயப்பட்ட ஈஸ்வரி, சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஈஸ்வரி கண் விழிக்கும் முன் அவரது இந்த நிலைக்கு காரணம் ஆனவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க கொற்றவை களத்தில் இறங்கி இருக்கிறார். அவர் தர்ஷன் மற்றும் தர்ஷினி உடன் வீட்டுக்கு சென்று அங்கு ஈஸ்வரி அடிபட்டு கிடந்த அறையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை கண்டறிய சென்றிருந்தார். அப்போது, அந்த அறையில் இருந்த செல்போன் அறிவுக்கரசி கையில் சிக்குகிறது. அதன்பின் அதில் ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ இடம்பெற்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார் அறிவு.
24
ஆதாரம் தேடி வீட்டுக்கு செல்லும் ஜனனி
அந்த சமயத்தில் கொற்றவை அந்த அறைக்கு வந்து கதவை தட்டுகிறார். இதனால் பதறிப்போன அறிவுக்கரசி, அந்த வீடியோவை டக்கென தன்னுடைய போனுக்கு மாற்றிவிட்டு, அதை ஈஸ்வரி போனில் இருந்து டெலிட் செய்துவிடுகிறார். பின்னர் தான் பாத்ரூம் சென்றிருந்ததாக கூறி எஸ்கேப் ஆகிறார். இதனால் எந்தவித எவிடன்ஸும் கிடைக்காமல் வீட்டை விட்டு கிளம்பும் கொற்றவைக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோரிடம் நடந்ததை கூறுகிறார். பின்னர், அவர்களை வீட்டுக்கு சென்று, ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை பார்த்துவர சொல்கிறார்.
34
ஆதி குணசேகரனை மிரட்டிய ஜனனி
பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ஆதி குணசேகரன். அதுமட்டுமின்றி சக்தியையும் ஜனனியையும் பிரித்துவிட பிளான் போடுகிறார் ஆதி குணசேகரன். இதை அறிந்து டென்ஷன் ஆகும் ஜனனி, சக்தியை திருப்பிவிட்டு, அவனை வைத்து என்னை மடக்கலாம்னு யோசிக்கிற எல்லாத்துக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். உங்களையெல்லாம் ஒரு கை பார்த்திருவேன் என அரிவாள் உடன் வந்து மிரட்டுகிறார் ஜனனி. இதைப்பார்த்த ஆதி குணசேகரன், கதிர் ஆகியோர் டர்ராகிப் போகிறார்கள். பின்னர் கொற்றவையை சந்திக்கப் போகிறார் ஜனனி.
ஜனனி - சக்தியை பிரிக்க பிளான் போடும் ஆதி குணசேகரன்
அப்போது தன்னை இந்த கேஸில் இருந்து விலகிவிட சொல்லிவிட்டார்கள் என்கிற குண்டை தூக்கிப் போடுகிறார் கொற்றவை. மேலும் ஆதி குணசேகரனிடம் இருந்து அழுத்தம் கொடுத்ததால் தான் தன்னை மாற்றிவிட்டார்கள் என கூறுகிறார். இதைக் கேட்டு ஷாக் ஆகிறார் ஜனனி. மறுபுறம் ஜனனி இனி இந்த வீட்டுக்கு வேண்டாம் என முடிவெடுக்கும் ஆதி குணசேகரன். தர்ஷன் கல்யாணத்தோடு சேர்த்து சக்திக்கும் வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணத்தை ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறுகிறார். இதனால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்கிற ட்விஸ்டோடு சென்றுகொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.