இமயமலையில் ஆன்மீக யாத்திரை முடிந்தது..! சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

First Published | Aug 16, 2023, 8:47 PM IST

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த், இமையமைக்கு சென்றிருந்த நிலையில், இன்று சென்னை திரும்பியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, வெளியான நிலையில்... உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படமாக மாறியுள்ளது. தொடர்ந்து இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
 

படம் வெளியாகி 6 நாட்களே ஆகும் நிலையில், இப்படம் இதுவரை சுமார் 400 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், வசூல் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?

Tap to resize

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் வெளியாக ஓரிரு நாட்கள் இருந்த நிலையில், இமயமலைக்கு சென்றார். ரஜினிகாந்த் சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் இமயமலைக்கு சென்றிருந்த நிலையில், முதலில் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி அவர்களுடைய சமாதியில் சென்று வணங்கி அங்கிருந்து தனது பயணத்தை துவங்கிய அவர், இமயமலையில் உள்ள பல இடங்களுக்கு சென்றார்.

குறிப்பாக நேற்று சுமார் 2 மணி நேரம் மலையேற்றம் செய்து மகா அவதார் பாபாஜி குகையில்ரஜினிகாந்த்  தியானம் செய்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. அதே போல் ரஜினிகாந்த் ஆசிரமம் ஒன்றில், சுதந்திர தினத்தை கொண்டாடிய புகைப்படங்களும் வைரலானது. தற்போது இமயமலையில் மேற்கொண்ட ஆன்மீக யாத்திரையை, முடித்து கொண்டு... ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை கல்யாணிக்கு இந்த நிலையா? வேறொருவரின் முதுகெலும்பை வைத்து அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Latest Videos

click me!