தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த 'அள்ளித்தந்த வானம்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. இதைத்தொடர்ந்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி - சதா நடித்த 'ஜெயம்' படத்திலும் சதாவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஒரு குழந்தை நட்சத்திரமாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், இதை தொடர்ந்து சில சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் மாம், பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், போன்ற நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீசன் 1 மற்றும் பிரிவோம் சந்திப்போம் சீசன் 2 சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மட்டும் இன்றி, பிக்பாஸ் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமிக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தாயுமானவன், ஆண்டாள் அழகர், கங்கா, போன்ற சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு கல்யாணி, தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில், கர்ப்பமான பின்னர் சின்னத்திரையில் இருந்து விலகினார். எனினும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இவர் தற்போது தனக்கு முதுகு தண்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஷி பட விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்த சமந்தாவை அலேக்காக தூக்கி ரொமான்ஸ் பண்ணிய விஜய் தேவரகொண்டா- photos இதோ
குறித்து அவர் போட்டிருந்த பதிவில், " கடந்த 6 மாதம் நான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்ந்தேன். தற்போது என் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர்தான் என்னுடைய மகள் நவ்யா பிறந்தார். அவர் பிறந்த பின்பு, நன்றாக தான் இருந்தேன். ஆனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மீண்டும் எனக்கு முதுகு மிகவும் வலிக்க ஆரம்பித்தது. இது குறித்து மருத்துவரை சந்தித்தோம். அவர் ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சையின் மூலம் என்னுடைய முதுகில் இருந்த பிரச்சனை சரியாகவில்லை என்று தெரிவித்தார். அவர் இதுபோல் சொல்வார் என கனவில் கூட நினைக்கவில்லை.
எனவே இந்த முறை எனக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறை வேறு ஒருவரின் முதுகுத்தண்டு எனக்கு பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என் உடலை இனி நான் உதாசீனம் செய்ய மாட்டேன். இதனால் என்னால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை. மேலும் என்னுடைய ஐந்து வயது மகள் நவ்யா மற்றும் என்னுடைய கணவர் இருவரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என கல்யாணி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?
அதே போல் தன்னை போல் மார்பிங் செய்து, நான் மருத்துவமனையில் இருப்பது போல்... சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. அதில் இருப்பது நான் இல்லை. அதை யாரும் நம்ப வேண்டாம் என கூறி விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.