விக்ரம் படத்தில் இடம்பெறும் ரோலெக்ஸ் கேமியோவுக்கு இணையாக ஷிவ ராஜ்குமாரின் ஜெயிலர் பட கேமியோ ரோல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயிலரில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவரை மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய கேமியோ ரோலில் ஸ்கோர் செய்திருந்தார் ஷிவ ராஜ்குமார். வெறும் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேரக்டராக ஷிவ ராஜ்குமாரின் நரசிம்மா கேரக்டர் அமைந்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் சக்கைப்போடு போடுவதற்கு காரணமும் ஷிவ ராஜ்குமாரின் கேமியோ தான். இவர் இதுவரை தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்தாலும், ஒரே படத்தில் மாஸ் ஹீரோவாக உயர்ந்துவிட்டார். ஜெயிலர் படத்துக்கு பின்னர் அவர் நடித்த கன்னட படங்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் தேடி தேடி பார்க்கும் அளவுக்கு ஷிவாண்ணாவுக்கு தமிழ்நாட்டில் மவுசு கூடி உள்ளது. ஜெயிலர் வெற்றியால் ஷிவ ராஜ்குமாரின் அடுத்த தமிழ் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இதையும் படியுங்கள்... கமலின் விக்ரம் படத்துக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா! ஓர் அலசல்
அதன்படி அவர் அடுத்ததாக தமிழில் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி இருக்கிறாராம் ஷிவ ராஜ்குமார். ஜெயிலர் படத்தால் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ரகுவரனின் மறைவுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா போன்ற ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைக்கும் சூழல் உருவானது. தற்போது அவர்களும் பிசியானதால் பிற மொழிகளில் இருந்து வில்லன்களை களமிறக்கி வருகின்றனர். ஏற்கனவே மலையாளத்தில் இருந்து வந்த பகத் பாசில், விநாயகன் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கேப்டன் மில்லர் ரிலீசுக்கு பின் ஷிவாண்ணாவும் கோலிவுட்டில் மாஸ் வில்லனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கயல் சீரியலில் நடந்த செம்ம ட்விஸ்ட்! பிரச்சனைக்கு நடுவே ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா.?