லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் விக்ரம். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்தது. கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் இந்த சாதனையை இன்னும் சில தினங்களில் முறியடிக்க உள்ளது. இதெல்லாம் இருக்கட்டும், இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அனிருத்
விக்ரம் மற்றும் ஜெயிலர் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் அனிருத்தின் இசை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. இரண்டு படங்களிலுமே டல் அடிக்கும் காட்சிகளில் கூட தன்னுடைய பிஜிஎம்மால் ஸ்கோர் செய்து அசத்தி இருப்பார் அனி. அதுமட்டுமின்றி விக்ரமில் ரோலெக்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஜெயிலரில் நரசிம்மாவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அனிருத் போட்ட பிஜிஎம் தனி ரகம் என்றே சொல்லலாம்.
வில்லன்
விக்ரம் படத்தில் பகத் பாசில் ஒரு வில்லனாக நடித்திருப்பார். இவர் ஒரு மலையாள நடிகர். அதேபோல் ஜெயிலரிலும் மலையாள நடிகரான விநாயகனை வில்லனாக நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். பகத் பாசில், விநாயகன் இருவருமே தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தனர்.
மகன் செண்டிமெண்ட்
விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலுமே மகன் செண்டிமெண்ட் முக்கிய பங்காற்றி இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இரண்டு படங்களிலுமே மகன் கேரக்டரில் நடித்துள்ளவர்களுக்கு போலீஸ் கதாபாத்திரம் தான். விக்ரமில் கமலின் மகனை நல்லவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் ஜெயிலரில் ரஜினியின் மகனை கெட்டவனாக காட்டி இருப்பார்கள்.
இண்டர்வெல்
விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களுக்குமே உயிர் கொடுத்தது இண்டர்வெல் காட்சிகள் என சொல்லலாம். விக்ரம் படத்தில் கமல் கோஸ்ட் ஆக மாறும் சீன் வேறலெவலில் இருக்கும். அதேபோன்ற ஒரு மாஸ் டிரான்ஸ்பர்மேஷன் சீனை தான் ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு வைத்திருப்பார்கள்.
பழைய பாடல்கள்
விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சு பாடலை பயன்படுத்தி அப்பாடலை வேறலெவலில் டிரெண்டாக்கி இருந்தார் லோகேஷ். அதே பார்முலாவில் ஜெயிலரில் வில்லன் வர்மன் கேங் இரு பாடல்களுக்கு நடனமாடி வைப் செய்திருப்பார்கள். அதில் ஒன்று 1999-ம் ஆண்டு வெளிவந்த தால் என்கிற இந்தி படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தால் சே தால் என்கிற பாடல் மற்றொன்று ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்ணோடு காண்பதெல்லாம் பாடல்.
இப்படி விக்ரம் படத்தின் வெற்றிக்கு வித்திட்ட பல விஷயங்களை ஜெயிலரிலும் பயன்படுத்தி விக்ரமையே மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை ருசித்திருக்கிறார் நெல்சன்.
இதையும் படியுங்கள்... டெரர் வில்லனாக மிரட்டிய விநாயகனுக்கு கம்மி சம்பளம் வழங்கிய ஜெயிலர் படக்குழு - அதுவும் இவ்வளவுதானா?