அது நடந்து 5 வருஷம் ஆகிடுச்சாம்... காதலுக்கு கிடைத்த வெற்றி - ராஷ்மிகாவுடன் ஜோடியாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா

Published : Aug 16, 2023, 01:34 PM IST

காதல் சர்ச்சைக்கு மத்தியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

PREV
14
அது நடந்து 5 வருஷம் ஆகிடுச்சாம்... காதலுக்கு கிடைத்த வெற்றி - ராஷ்மிகாவுடன் ஜோடியாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா

கிரிக் பார்டி என்கிற கன்னட படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா. இவரை தெலுங்கில் பிரபலமாக்கிய திரைப்படம் என்றால் அது கீதா கோவிந்தம் தான். பரசுராம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் கெமிஸ்ட்ரி தான். இதனால் இளசுகள் மத்தியில் இப்படம் வேறலெவலில் ரீச் ஆனது.

24

அதுவும் இப்படம் மொழி கடந்து கொண்டாடப்பட்டதற்கு அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் முக்கிய காரணம். சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் தமிழ்நாட்டிலும் வேறலெவலில் ஹிட் ஆனது. கீதா கோவிந்தம் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவரும் டியர் காம்ரேட் என்கிற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்ததால், அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவ தொடங்கியது.

இதையும் படியுங்கள்... டெரர் வில்லனாக மிரட்டிய விநாயகனுக்கு கம்மி சம்பளம் வழங்கிய ஜெயிலர் படக்குழு - அதுவும் இவ்வளவுதானா?

34

இதுகுறித்து இருவருமே விளக்கம் அளிக்காததால் இன்றளவும் அவர்கள் பற்றிய காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரின் இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் கீதா கோவிந்தம் திரைப்படம் தான்.

44

கீதா கோவிந்தம் திரைப்படம் ரிலீஸ் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை வெற்றிகரமாக கொண்டாடும் விதமாக இயக்குனர் பரசுராம், நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒன்றாக இணைந்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர். ரீல் காதலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் கீதா கோவிந்தம் இரண்டாம் பாகம் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... படாதபாடு படுத்தும் மயோசிடிஸ் நோய்... சமந்தா இன்னும் குணமாகல - விஜய் தேவரகொண்டா சொன்ன அதிர்ச்சி தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories