படாதபாடு படுத்தும் மயோசிடிஸ் நோய்... சமந்தா இன்னும் குணமாகல - விஜய் தேவரகொண்டா சொன்ன அதிர்ச்சி தகவல்

First Published | Aug 16, 2023, 12:05 PM IST

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த சமந்தா, கடந்தாண்டு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மிகவும் கஷ்டப்பட்ட சமந்தா, சினிமா படப்பிடிப்புகளிலும் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவானது. ஒரு கட்டத்தில் தான் நடிக்க கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்து வரிசையாக விலகியும் வந்தார். இதனால் சமந்தாவின் கெரியரும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் 5 மாதம் கடினமாக சிகிச்சைக்கு பின்னர் மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தன் கைவசம் உள்ள படங்களில் நடித்துக் கொடுக்க முடிவு செய்து ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார். அந்த வகையில் மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சமந்தா முதன்முதலில் நடித்த திரைப்படம் குஷி.


குஷி படத்தின் நடித்து வந்தபோது தான் நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அப்படக்குழு சமந்தாவின் உடல் நிலை குணமாகும் வரை அப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தாமல் இருந்தது. இறுதியாக இந்த ஆண்டு சமந்தா உடல்நிலை தேறி வந்த பின்னர் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி முடித்த படக்குழு, அப்படத்தை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... சேலையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய சமந்தா - கிக்கான போட்டோஸ்

இந்நிலையில், குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது குறித்து எமோஷனலாக பேசி உள்ளார். அதில் அவர் பேசியதாவது : “குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரின் புன்னகையோடு இப்படத்தை தொடங்கினோம். ஒரே கட்டமாக 60 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். 

இதையடுத்து ஜூலை மாதம் சமந்தாவின் உடல்நிலை மோசமானது. அவர் உடல்நிலை சரியில்லை என சொன்னபோது கூட, அவர் அழகா தான் இருக்கிறார், அவருக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என நானும் இயக்குனரும் லேசாக எடுத்துக்கொண்டோம். பின்னர் தான் அதன் தீவிரம் எங்களுக்கு தெரியவந்தது. ஆரம்பத்தில் அதுகுறித்து சமந்தா எதுவும் பேசவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அவரே தன் உடல்நல பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார்.

அவர் மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தீவிரத்தால் ஒரு கட்டத்தில் எங்களிடம் கூட பேசவில்லை. எங்களை பார்க்கவும் விடவில்லை. அந்த அளவுக்கு கடுமையான வேதனையை அனுபவித்து இருக்கிறார். இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இங்கிருக்கும் லைட்களால் அவருக்கு தலைவலி ஏற்படும், இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் மீதுள்ள அன்புதான் காரணம். இதே புன்னகையை செப்டம்பர் 1-ந் தேதியும் நான் பார்க்க விரும்புகிறேன்” என விஜய் தேவரகொண்டா பேசினார்.

இதையும் படியுங்கள்... குஷி பட விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்த சமந்தாவை அலேக்காக தூக்கி ரொமான்ஸ் பண்ணிய விஜய் தேவரகொண்டா- photos இதோ

Latest Videos

click me!