சுதந்திர தினத்தன்று வசூல் வேட்டை நடத்திய சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர்... 6 நாட்களில் இம்புட்டு கலெக்‌ஷனா?

First Published | Aug 16, 2023, 10:39 AM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அதன் 6 நாள் கலெக்‌ஷன் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். ரஜினியின் கம்பேக் படமாக ஜெயிலர் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் வேறலெவல் ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலர் படம் ரஜினிக்கு மட்டுமல்ல நெல்சனுக்கும் தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. பீஸ்ட் பட தோல்விக்கு பின்னர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நெல்சனுக்கு இப்படம் ஒரு பூஸ்ட் ஆக அமைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் நடித்த ஷிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் தான்.

இதையும் படியுங்கள்... இரண்டு மணிநேர மலையேற்றம்.. பாபாஜி குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ!


ஜெயிலர் படம் நடிகர் ரஜினிகாந்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே ரூ.100 கோடியை நெருங்கிய ஜெயிலர் பட வசூல், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.400 கோடியை நெருங்கி உள்ளது.

ஜெயிலர் திரைப்படம் ஆறு நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.381 கோடி வசூலித்து உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.112 கோடி வசூல் செய்துள்ளது. இதுதவிர கேரளாவில் ரூ.33 கோடியும், கர்நாடகாவில் ரூ.43 கோடியும், ஆந்திராவில் ரூ.46 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.7 கோடியும், வெளிநாடுகளில் ரூ.140 கோடியும் வசூலித்து இருக்கிறது. இன்றைய தினம் இப்படம் ரூ.400 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ.350 கோடி வசூலித்து இருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை ஜெயிலர் முறியடித்து உள்ளது. விரைவில் விக்ரம் மற்றும் 2.0 படங்களின் வசூல் சாதனையையும் ஜெயிலர் முறியடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... தமிழகம் டூ இமயமலை... தன்னை பார்க்க 55 நாட்கள் நடந்தே வந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

Latest Videos

click me!