நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குஷி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன.
குஷி திரைப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் பாடலான என் ரோஜா நீயா என்கிற பாடல் அனைத்து மொழிகளிலும் வேறலெவல் ஹிட் அடித்தது.
குஷி திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷனுன் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இப்படத்தை விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருமே மலைபோல் நம்பி உள்ளனர். ஏனெனில் விஜய் தேவரகொண்டாவுக்கு கடைசியாக வெளிவந்த லைகர் திரைப்படமும், சமந்தா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படமும் படு தோல்வி அடைந்தது.
இந்நிலையில், குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் நேற்று சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டது. இதில் நடிகை சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் குஷி பட பாடலுக்கு நடனமாடி மேடையிலேயே லைவாக ரொமான்ஸ் பண்ணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.