உலகமே தற்போது ரஜினியை கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் அவரின் ஜெயிலர் திரைப்படம் தான். ஜெயிலர் வெற்றி ரஜினிக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அதற்கான கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. ஏனெனில் அவர் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இமயமலைக்கு கிளம்பி சென்ற ரஜினிகாந்த், அங்கு தன்னுடைய ஆன்மீக பயணத்தில் பிசியாக உள்ளார்.
இமயமலை பயணத்தின் போது செல்லும் இடமெல்லாம் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இமயமலையில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு நடைபயணமாக சென்று சாமி தரிசனம் செய்து வரும் ரஜினி, நேற்று 2 மணிநேரம் மலையேற்றம் செய்து பாபாஜி குகையில் தியானம் செய்திருக்கிறார். பாபாஜி குகைக்கு செல்லும் வழியில் ஒரு ருசீகர சம்பவம் நடந்துள்ளது.
ரஜினிகாந்த் பாபாஜி குகைக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு அவரை காண ரசிகர் ஒருவர் காத்திருந்தாராம். பின்னர் ரஜினி அவரை சந்தித்து பேசியபோது தான், அந்த ரசிகர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை பார்ப்பதற்காக 55 நாட்கள் நடைபயணமாக இமயமலை வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் நெகிழ்ந்து போன ரஜினி அந்த ரசிகருக்கு பண உதவி செய்ததோடு, அவர் மரத்தடியில் தூங்கியதை அறிந்து, அவருக்கு தங்குமிடமும் ஏற்பாடு செய்ய உதவி இருக்கிறார். ரஜினியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... சுதந்திர தினம்.. சைலெண்டாக அப்டேட் கொடுத்த இயக்குனர் சங்கர் - வந்துவிட்டார் இந்தியன் தாத்தா!