மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்காக தற்போது, சினிமாவில் இருந்து தற்காலிகமாக, நடிகை சமந்தா விலகி இருப்பதாக கூறப்படும் நிலையில்... இவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு நிலையில் எழுந்து கூட நிற்க முடியாமல் சமந்தா அவதிப்பட்ட நிலையில், சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணியை கூட, கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் தான் மேற்கொண்டார். இவரின் பிரச்சனை குறித்த தகவல் வெளியான போது ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வந்தது மட்டும் இன்றி, விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர தங்களின் பிரார்த்தனைகளையும் முன் வைத்தனர்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து, இவரின் கைவசம் இருந்த குஷி மாற்று, சிட்டாடல் ஆகிய வெப் தொடரில் நடித்து முடித்த சமந்தா, ஆன்மீக சுற்றுலா மற்றும் வெளிநாட்டில் நண்பர்களுடன் வெகேஷனை என்ஜோய் செய்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே போல், ஜீப்ரா மாடலில்... லுங்கி போல் இருக்கும் வேற லெவல் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.