மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் ரஜினிகாந்தின் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், ஜாக்கி ஷெரஃப், ஷிவ்ராஜ்குமார் என பலர் நடித்துள்ள இப்படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் இதுவரை சுமார் 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரஜினி படங்கள் அதிக வசூல் செய்வது இது முதன்முறையல்ல.
sivaji the boss
2008-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் சிவாஜி. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலை குவித்தது. அந்த நேரத்தில் தமிழில் அதிக வசூல் செய்த படமாக சிவாஜி இருந்தது. தமிழில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையையும் சிவாஜி பெற்றது. இப்படம் 160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
2010-ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அசால்டாக 100 கோடி வசூலை கடந்த மொத்தம் சுமார் 300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இதனால் 2010-ல் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையைம் எந்திரன் படம் பெற்றது.
2014-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் லிங்கா. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கிளைமேக்ஸ் மற்றும் திரைக்கதை குறித்து பல நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இந்த படமும் 100 கோடி வசூல் செய்த படங்களில் ஒன்றாக உள்ளது. ஆம். தோல்விப் படமாக கருதப்படும் இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.
kabali
2016-ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் கபாலி. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆம். இப்படம் வெளியான முதல் நாளே ரூ.21 கோடி வசூல் செய்தது. இதனால் முதல் வாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ.350 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கபாலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பா.ரஞ்சித் உடன் ரஜினி மீண்டும் இணைந்த படம் காலா. 2018-ல் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனினும் 100 கோடி வசூல் படங்களில் காலாவும் ஒன்று. இப்படம் சுமார் ரூ.160 கோடி வசூல் செய்தது.
எந்திரனின் 2-வது பாகமாக மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆம். இப்படம் 700 கோடி முதல் 800 வரை வசூல் செய்தது. இதனால் இப்படம் இன்று தமிழில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த படம் பேட்ட. 2019-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் 100 கோடி வசூல் படங்களில் இதுவும் ஒன்று. பேட்ட படம் சுமார் 240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கைகோர்த்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். 2020-ம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் அசால்டாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ240 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய படம் அண்ணாத்த. 2021-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்த நிலையில், வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படமாக கருதப்படுகிறது, இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.