உன்ன ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்... வாய்விட்டு மாட்டிக் கொண்ட லோகேஷ்; வச்சு செய்ய காத்திருக்கும் ரஜினி

Published : Jul 26, 2025, 03:49 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி பட கதையை சொல்லும் முன் ரஜினியிடம் தான் ஒரு கமல் ரசிகன் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி தக் லைஃப் ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

PREV
14
Lokesh Kanagaraj About Coolie Rajinikanth

தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கூலி திரைப்படமும் ஒன்று. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

24
கமல் ரசிகன் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகத்தீவிரமான கமல் ரசிகன் என்பது அனைவரும் அறிந்ததே, இந்த நிலையில், கூலி படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனின் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசி இருக்கிறார் லோகேஷ். கூலி படத்தின் கதை சொல்லும் போது யதார்த்தமாக ஒரு இடத்தில் தான் ஒரு கமல் ரசிகன் என சொல்லி இருக்கிறார் லோகேஷ்.. அப்போ ரஜினியும் எதுவும் சொல்லவில்லையாம். ஆனால் கூலி பட ஷூட்டிங்கெல்லாம் முடிந்து டப்பிங்கும் பேசி முடித்து கிளம்பும்போது லோகேஷின் உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி, அவர் என்னிடம் முதன் முதலில் கதை சொல்ல வரும்போது நான் கமல்சார் ரசிகன் என்று தான் ஆரம்பித்தார். நான் அவரை ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

34
லோகேஷை வச்சு செய்ய காத்திருக்கும் ரஜினி

மேடைப் பேச்சு என்று வந்துவிட்டாலே ரஜினிகாந்தை அடிச்சுக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பட்டாசாய் பேசுவார். அவரின் மேடைப் பேச்சுக்கே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதனால் இந்த கூலி பட ஆடியோ லாஞ்சில் பேசும் போது லோகேஷை ரஜினிகாந்த் கலாய்ப்பது கன்பார்ம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மேலும் சமீபத்திய பேட்டியில் பேசிய லோகேஷ், தன்னுடைய அம்மா சிறு வயதில் தனக்கு சூப்பர்ஸ்டார் பாடலை காட்டி தான் சாப்பாடு கொடுத்ததாக சொன்னதை நினைவுகூர்ந்தார். தன்னை தவிர்த்து தன்னுடைய குடும்பத்தில் அனைவருமே ரஜினி ரசிகர்கள் எனக் கூறிய லோகேஷ், தானும் முத்து, படையப்பா வரை ரஜினி ரசிகனாக இருந்ததாக கூறினார்.

44
கமல் ரசிகன் ஆனது எப்படி?

சத்யா படம் பார்த்த பின்னர் தான் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆனாராம் லோகேஷ். அதற்காக நான் ரஜினிக்கு எதிரி கிடையாது. சைமா விருதுவிழாவில் கமல் சாரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். உங்களோட ரசிகன் அடுத்து ரஜினிக்கு படம் பண்ண போகிறார் என்று கேட்டாங்க. அதற்கு அவர், என்னோட ரசிகன் ரஜினிக்கு படம் பண்ணுவது எனக்கு பெருமை. நல்லா படம் பண்ணிட்டு அடுத்து இங்க வாங்க என கமல் சொன்னதை நினைவு கூர்ந்த லோகேஷ், அந்த ஒரு பொறுப்பும் தனக்கு இருப்பதாக கூறினார். கூலி படம் முடித்த பின்னர் கைதி 2, விக்ரம் 2 என லோகேஷின் லைன் அப் செம பிசியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories