நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமாகி இருக்கிறார். இவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷான் தான் ஹீரோவாக நடிக்கிறார். அப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் என்பதால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
24
மகனை ஹீரோவாக்க ஆசைப்பட்ட விஜய்
ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமானாலும், அவரை ஹீரோவாக்கி அழகுபார்க்க தான் நடிகர் விஜய் விரும்பினார். இதை ஒரு பேட்டியில் விஜய்யே ஓப்பனாக கூறினார். ஜேசன் சஞ்சய்க்காக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதை ஒன்றை தயார் செய்து கொண்டுவந்தாராம். அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக, அதை தன் மகன் எப்படியாவது ஓகே செய்துவிட வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தாராம். ஆனால் ஜேசன் சஞ்சய், தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை என்றும், தனக்கு படம் இயக்குவதில் தான் ஆர்வம் இருப்பதாக கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.
34
இன்ஸ்டாவில் இணைந்த ஜேசன் சஞ்சய்
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படிக்கும் போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருந்து வந்தார். ஆனால் இயக்குனராக அறிமுகமான பின்னர் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். அதில் தற்போது 3.76 லட்சம் பேர் ஜேசன் சஞ்சய்யை பின் தொடர்ந்து வருகிறார்கள். தன்னுடைய படம் பற்றிய தகவல்கள் மற்றும் தான் இயக்கிய குறும்படத்தை பற்றிய அப்டேட்டுகளை மட்டும் அதில் பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்ஸ்டாவில் மொத்தமே 35 பேரைத் தான் ஜேசன் சஞ்சய் பாலோ செய்கிறார். அதில் தமிழ் நடிகர் ஒருவர் தான்.
ஒரே தமிழ் நடிகர் என்றதும் அது விஜய்யாக தான் இருக்கும் என நினைப்பீர்கள். அங்கு தான் ட்விஸ்ட் வைத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் தன்னுடைய தந்தையை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யவே இல்லை. அவர் பாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர் என்றால் அது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் தான். இதுதவிர தன்னுடைய முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷானை பின் தொடர்கிறார். மற்றபடி இசையமைப்பாளர்களான தமன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரையும் பாலோ செய்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜேசன் சஞ்சய் ஏன் விஜய்யை பாலோ செய்யவில்லை. இருவருக்கும் இடையே சண்டையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.