ஜெயிலரை விட பவர்புல் டைட்டிலா இருக்கே... ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ பட தலைப்பு லீக் ஆனது!

First Published | Aug 18, 2023, 4:07 PM IST

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

Thalaivar 170

அண்ணாத்த படத்தின் தோல்வியால் துவண்டுபோய் இருந்த ரஜினிகாந்துக்கு ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் இமயமலையில் ஒரு வாரம் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினி, அதற்கு அடுத்தபடியாக தற்போது ராஞ்சிக்கு சென்று இருக்கிறார்.

Rajinikanth

இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் அவர் ஜெயிலர் பட வெற்றி விழாவை கொண்டாட உள்ளார். இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜெய்பீம் படத்தின் இயக்குனரான த.செ.ஞானவேல் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... இயக்குனர் சித்திக்கின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட விஜய் - காரணம் என்ன?


thalaivar 170

ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் தலைவர் 170 படத்துக்கும் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் வில்லன் நடிகர் பகத் பாசில் ஆகியோரும் தலைவர் 170 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது.

Rajinikanth

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் டைட்டில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளாராம். அதுவும் ரெளடிகளை வேட்டையாடும் கதாபாத்திரம் என்பதால் இதற்கு வேட்டையன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஜெயிலரை விட வேட்டையன் டைட்டில் பவர்புல்லாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் இந்திய நடிகை யார் தெரியுமா? கண்டிப்பா ஸ்ரீ தேவி, மாதுரி இல்ல..

Latest Videos

click me!