ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் இருந்து ரிலீஸ் ஆக உள்ள மாஸ் படம் என்றால் அது தளபதி விஜய்யின் லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
24
Balakrishna, Shivarajkumar, Rajinikanth
லியோ படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியிடப்படும் என அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே அறிவித்துவிட்டனர். இதனால் தமிழ்நாட்டில் அப்படத்தோடு போட்டியிட எந்த நடிகர்களும் தயாராக இல்லை. இருப்பினும் பிற மாநிலங்களில் லியோ படத்துக்கு போட்டியாக பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாக உள்ளன. அதன்படி தெலுங்கில் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவத் கேசரி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
அதேபோல் கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்ட் திரைப்படம் லியோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இவரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் ஆவார். இப்படி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விஜய் படத்துக்கு போட்டியாக ரஜினியின் நண்பர்கள் படம் ரிலீஸ் ஆக உள்ளதால், லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
44
vijay rajinikanth
லியோ திரைப்படத்தை பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தான் அப்படத்தில் பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளை நடிக்க வைத்துள்ளனர். அப்படி இருக்கையில், விஜய் பெரிதும் எதிர்பார்த்து இருந்த ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அங்குள்ள முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸாக உள்ளதால், விஜய்யின் லியோ படத்துக்கு அதிகளவில் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.