தீபாவளி ரேஸில் சிம்புவுக்கு போட்டியாக களத்தில் குதித்த ரஜினிகாந்த்... பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் லோடிங்...!

Published : Jun 17, 2026, 11:42 AM IST

Simbu vs Rajinikanth : 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் வர உள்ள நிலையில், அதற்கு ரஜினி, சிம்பு படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

PREV
14
Diwali Release Movies

தீபாவளி பண்டிகை என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் அன்று ரிலீஸ் ஆனால் தியேட்டரில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு தரமான படங்கள் போட்டிபோட்டு களத்தில் இறங்கி உள்ளன. இதனால் இந்த ஆண்டு தீபாவளி, ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.

24
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் அரசன்

இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் குதித்த முதல் படம், அரசன். சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். வட சென்னை யூனிவர்ஸில் தயாராகும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு உடன் பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அரசன் படத்தின் படப்பிடிப்பு செம பாஸ்ட் ஆக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர தீயாய் வேலை செய்கிறார்கள்.

34
அரசனுக்கு போட்டியாக வரும் ஜெயிலர் 2

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல்படி, சிம்புவின் அரசன் படத்துக்கு போட்டியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இன்னும் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் கேமியோ காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விஜய் சேதுபதி, மோகன்லால் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது.

44
வசூல் வேட்டைக்கு காத்திருக்கும் ஜெயிலர் 2

ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை போல் இரண்டாம் பாகத்தையும் வெற்றியடைய வைக்க படக்குழுவினர் தீயாய் வேலை செய்கிறார்கள். ஜெயிலர் 2 படம் ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories