நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது படம் இயக்குவதில் பிசியாகி உள்ளார். இதற்கு முன் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய அவர், நீண்ட இடைவெளிக்கு பின் இயக்க உள்ள திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
லால் சலாம் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் எத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எத்தனை கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினி மொத்தமாக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதற்காக அவருக்கு ரூ.25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.130 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கும் ரஜினிகாந்த், லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரூ.25 கோடி சம்பளமாக வாங்கி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதன்மூலம் கேமியோ ரோலில் நடிக்க அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் ரஜினி.
இதையும் படியுங்கள்... மறுவெளியீட்டில் வசூல் சாதனை நிகழ்த்திய பாபா... படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்