நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஜனவரி 14ந் தேதி அன்று ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு புரோமோ வீடியோவுடன் வெளியானது.
24
ஜெயிலர் 2 ரஜினிகாந்த் சம்பளம்
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் பாசில், ஷிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் 260 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
34
விஜய்யை ஓவர்டேக் செய்தாரா ரஜினி?
இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் விஜய்யை நெருங்கி உள்ளார் ரஜினி. ஆனால் விஜய்யை முந்தவில்லை. இதனால் தற்போது நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி முதலிடத்தில் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தைப் போலவே அதன் இரண்டாம் பாகமும் அதிரடி காட்சிகளால் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது.
ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் மோகன்லாலின் மாத்யூ என்ற டான் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது அண்மையில் உறுதியானது. மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படப்பிடிப்பில் இயக்குனர் நெல்சன் கலந்துகொண்டார். மோகன்லாலிடம் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கவே நெல்சன் அங்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் மற்றொரு படமான கூலி வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.